கரூர்: குளித்தலை அருகே தலை இல்லாமல் ஆண் சடலம் ஒன்று கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேட்டு வாய்க்காலில் தலை இல்லாமல் ஆண் சடலம் ஒன்று கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, உடலை மீட்ட போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்தவர் அரவக்குறிச்சியை சேர்ந்த பிரபல ரவுடி காளிதாஸ் 32 என்பது அடையாளம் தெரியவந்துள்ளது.