270க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து
100 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.80,000 ரொக்கப்பணம் மீட்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளில் ஈடுபட்ட உள்ளூர்வாசிகள் தங்கம், பணம் மற்றும் பாஸ்போர்ட்டுகளை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். விபத்தில் பலியானவர்களிடமிருந்து மீட்கப்பட்ட அனைத்து பொருட்களும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்தார்.