மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி தேனிலவின் போது கூலிப்படை வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியது. இந்நிலையில், கொலை செய்யப்பட்ட ராஜா ரகுவான்ஷி மற்றும் அவரது மனைவி சோனம் இருவரும் அனுமதி இல்லாத ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்து பயணித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, பைக் உள்ளிட்ட White Board வாகனங்களை வாடகைக்கு விட மேகாலய அரசு தடை விதித்துள்ளது.