அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவ்

நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இப்போட்டியில் 6-3, 7-6(2), 5-7, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவ் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். அரையிறுதியில் கச்சனோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஸ்வெரேவ், சொந்த மண்ணில் களம் கண்ட அமெரிக்க வீரர் ஷெல்டனை வீழ்த்தி முதலாவது அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕