புதுடெல்லியில் நேற்று (செப்.28) நடைபெற்ற தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக 'பூஜ்ஜிய சகிப்பு தன்மை' கொள்கையை பின்பற்றி வருவதாக தெரிவித்தார். மேலும், 2019-2026 வரை 36 வெளிநாடுகளிலிருந்து தப்பி ஓடிய 288 குற்றவாளிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், எல்லை தாண்டிய கடத்தலில் ஈடுபட்ட 350 பேர் கைது செய்யப்பட்டு 40-க்கும் மேற்பட்ட கடத்தல் வலையமைப்புகள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.