நடிகை கவுரி கிஷனிடம் யூடியூபர் அநாகரிகமாக நடந்துகொண்டதற்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் சங்க தலைவர் நாசர், 'எங்கள் சகோதரிக்கு இதுபோல நடந்தது வன்மையான கண்டனத்திற்குரியது. இனி எதிர்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு முன்னெடுப்புகளை தொடங்குவோம்' என குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்னையில் சினிமா பிரபலங்கள் பலரும் நடிகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.