90 வினாடி 'ஸ்கிப்' செய்ய முடியாத விளம்பரங்களை அறிமுகம் செய்யும் YouTube

ஸ்மார்ட் டிவிகளில் YouTube பார்க்கும் பயனர்களுக்கு, இதுவரை இருந்த 30 வினாடி 'தவிர்க்க முடியாத' விளம்பர நேரத்தை 90 வினாடிகளாக அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தனது வருவாயை பெருக்கவும், விளம்பரங்கள் இல்லாத 'Premium Subscription' திட்டத்திற்கு பயனர்களை மாற்றவும் இத்தகைய முடிவை YouTube எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரம்பரிய தொலைக்காட்சி விளம்பரங்களை போன்ற இந்த நீண்ட நேர இடைவெளிகள், தற்போது முதற்கட்டமாக சில நாடுகளில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டு வருவதால் பயனர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி