மகாராஷ்டிராவில் தனது மகளை இளைஞர்கள் சிலர் ஈவ்டீசிங் செய்ததாக மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மத்தியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சராக இருப்பவர் ரக்ஷா கட்சே. இவரது மகள், தனது நண்பர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இளைஞர்கள் சிலரால் ஈவ்டீசிங் செய்யப்பட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், “எனது மகளுக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால் மற்றவர்களின் நிலை என்னவாகும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.