மயிலாடுதுறை மாவட்டம் அருகே கல்லூரி மாணவர் மற்றும் இளைஞர் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். படுஜோராக நடக்கும் சாராய வியாபாரத்தை ஹரிசக்தி மற்றும் ஹரி ஆகிய இளைஞர்கள் தட்டிக்கேட்டதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, ஏற்பட்ட சாராய ரெய்டில் அந்த வியாபாரி கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, இளைஞர்கள் இருவரையும் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதில் தப்பியோடிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நன்றி: kumudamNews24x7