மிளகாய்ப் பொடி தூவி நகை கொள்ளை முயற்சி.. பெண்ணை வெளுத்த இளைஞர்

குஜராத் மாநிலத்தில், மிளகாய்ப் பொடி தூவி நகைகளை கொள்ளையடிக்க முயன்ற பெண்ணை, இளைஞர் சரமாரியாக தாக்கியுள்ளார். அகமதாபாத்தில் உள்ள ஒரு நகைக் கடையில், பெண் ஒருவர் நகை வாங்குவதுபோல் நடித்து, கொள்ளையடிக்க முயன்றுள்ளார். கடையில் இருந்த வியாபாரி அசந்த நேரத்தில் அவரது முகத்தில் மிளகாய்ப் பொடி தூவியுள்ளார். ஆனால், சாமர்த்தியமாக தப்பிய இளைஞர், அப்பெண்ணை மடக்கிப் பிடித்து 17 முறை அறைந்துள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

நன்றி: TheSiasatDaily

தொடர்புடைய செய்தி