மணல் கடத்திய டிராக்டர் மோதியதில் இளைஞர் பலி

ராஜஸ்தானில் மணல் மாபியா தலைவிரித்தாடுகிறது. பரத்பூர் நகரில் உள்ள மதுரா கேட் காவல் நிலையம் அருகே மணல் ஏற்றிக் கொண்டு தப்பிய டிராக்டரை அப்பகுதி மக்கள் தடுக்க முயன்றனர். ஆனால் டிராக்டர் நிற்காமல் வேகமாக சென்றதால் உபேந்திரா (22) என்ற இளைஞர் டிராக்டர் அடியில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி