செங்கல்பட்டு அருகே, வேலை முடிந்து வீடு திரும்பிய சந்துரு (27) என்பவர், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நெல்லை விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செங்கல்பட்டு ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விபத்து அல்லது தற்கொலை என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.