தெலங்கானா: ஜதராபாத்தில் செல்போன் வெடித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜகத்கிரிகுட்டா பகுதியில் வசித்து வந்த ஐடி ஊழியரான சாய் 27, செல்போனை சார்ஜ் செய்தபடி உபயோகித்துள்ளார். இந்நிலையில், செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அவரது உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால், சாய் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
நன்றி: Sakshi TV