படுத்திருந்த மாடு மீது பைக் மோதி இளைஞர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் படுத்திருந்த மாடு மீது மோதியதில் பைக்கில் சென்ற முஜிப் (21) என்ற இளைஞர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (நவ., 14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாலையில் விளக்குகள் இல்லாத நிலையில் கால்நடைகள் திரிவது, இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அப்பகுதியினர் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி