உலகிற்கு நேரு நாகினி ஆட்டம் காட்டினார் - பாஜக விமர்சனம்

டெல்லியில் நடைபெற்ற ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டின்போது இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், பாஜக தலைவர் நிஷிகாந்த் துபே, காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதமர் நேருவை விமர்சித்து பேசினார். நேரு உலகிற்கு நாகினி ஆட்டம் காண்பித்தார் என்றும், மோடி தொழில்நுட்பம் மற்றும் ஏ.ஐ.யை உலகிற்கு காட்டினார் என்றும் அவர் கூறினார். மேலும், 1962-ல் ஜாக்குலின் கென்னடியை நேரு வரவேற்ற புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி