சென்னையில் ஐ.டி. ஊழியர் ஒருவர் பேருந்தின் சக்கரத்தில் தலையை வைத்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வண்ணாரப்பேட்டை சேர்ந்த 32 வயது ஜியாவுல்லா, இன்று (நவ.21) கல்லறைச் சாலையில் இயக்கத்தில் இருந்த மாநகரப் பேருந்தின் கீழ் தானாகவே படுத்து உயிரை மாய்த்துக் கொண்டார். ஆரம்பத்தில் விபத்தாக சந்தேகித்து பேருந்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், சிசிடிவி மூலம் இது தற்கொலை என்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.