முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பிரவின் கணேசன் என்பவரை டெல்லி விமான நிலையத்தில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த தனிப்படை போலீசார், டெல்லி ஏர்போர்ட்டில் வைத்து அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அவரிடம் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.