நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே தலைநிமிர்ந்து நிற்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று வருவதை சுட்டிக்காட்டிய அவர், முன்னதாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை பார்த்த அதே இளைஞர்கள், தற்போது சட்டப்பேரவை நேரலையைப் பார்ப்பது ஆரோக்கியமான மாற்றத்திற்கு சான்று என கூறியுள்ளார்.