நடிகர் விஜயை காண வேண்டும்.. இளம்பெண் தற்கொலை மிரட்டல்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கீதா (31) என்ற பெண் தனது தந்தையுடன் நேற்று (பிப். 02) ஆட்டோவில் சென்ற போது திடீரென கீழே இறங்கி அருகில் இருந்த எம்.எம். தியேட்டருக்குள் ஓடினார். அங்கு 4வது மாடிக்கு சென்ற அவர் நடிகர் விஜயை காண வேண்டும் என கூச்சலிட்டு கீழே குதித்து விடுவேன் என தற்கொலை மிரட்டல் விடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி கீழே இறக்கி மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்புடைய செய்தி