தாம்பரம் பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தாம்பரம் பேருந்து நிலைய பகுதியில் இருந்து ஷேர் ஆட்டோவில் பயணம் செய்வதற்கு அவரது தாயுடன் காத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு 50 வயது நபர் ஒருவர் அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்தப் பெண் முதியவரை கன்னத்தில் அறைந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.