கேரளாவின் கொல்லத்தில் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய வழக்கில் இளம்பெண்ணை நீதிமன்றம் விடுவித்தது. விடுதி கழிவறையில் ரகசியமாக மொபைல் போனை வைத்து வீடியோ எடுத்து அதனை காதலனுக்கு அனுப்பியதாக சம்பந்தப்பட்ட மாணவி மீது அறையில் உள்ள சக தோழிகள் போலீசில் புகார் அளித்தனர். 2011 பிப்ரவரி 2ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில் சுமார் 14 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. தற்போது ஆதாரம் இல்லை எனக்கூறி மாணவியும், காதலனும் விடுவிக்கப்பட்டனர்.