சூட்கேஸில் இளம்பெண் சடலம் கண்டெடுப்பு

உ.பி: காசியாபாத்தில் சூட்கேஸில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி - உ.பி., எல்லையான லோனி பகுதியிலுள்ள கால்வாய் அருகே சந்தேகத்திற்கிடமான ஒரு சூட்கேஸ் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்தபோது, மூக்கில் ரத்தம் வழிந்தபடி இளம்பெண்ணின் சடலம் இருந்துள்ளது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி