பரிகாரம் செய்வதாக ஏமாற்றி இளம்பெண் பலாத்காரம்

கோவை சரக ஐ.ஜி.யிடம் திருப்பூரைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் மூலம் ஜோதிடரை சந்தித்ததாகவும், பரிகாரம் செய்வதாக கூறி பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லசமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பணத்தை பறித்துக் கொண்டு, ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற விவரத்தை மறைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕