கடலூர் மாவட்டத்தில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பெண் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையின் பின்னணி மற்றும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.