கேரளா: கொல்லம் அருகே அஞ்சனா (21) என்ற இளம்பெண், முகமது நிஹாஸ் என்பவரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு அஞ்சனாவின் வீட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர் கடந்த 6 மாதங்களாக நிஹாசின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு (ஜூலை 30) வீட்டின் படுக்கை அறையில் அஞ்சனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.