கன்னியாகுமரி: கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஜெமலா (26) என்ற பெண்ணும், நிதின் ராஜ் (26) என்பவரும் காதலித்து, வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி 8ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது ஜெமலா தற்கொலை செய்துகொண்டார். இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில், திருவள்ளூரைச் சேர்ந்த லோகேஸ்வரி (22), திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா (27) ஆகிய புதுமணப்பெண்கள் இதேபோல் தற்கொலை செய்துகொண்டனர்.