நெல்லை திசையன்விளை அருகே, கணவனை இழந்த 33 வயது இளம்பெண் தனது இரு மகள்களுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில், இரண்டு மர்ம நபர்கள் அவரது வீட்டின் மேற்கூரையில் ஏறி ஓடுகளைப் பிரித்து உள்ளே நுழைய முயன்றனர். சத்தம் கேட்டு எழுந்த இளம்பெண் திருடன் என கூச்சலிட, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ரஞ்சித் (19) மற்றும் ராஜேஷ்குமார் (29) ஆகியோரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.