கேரளா: இடுக்கி மாவட்டம் மறையூரை சேர்ந்த 26 வயது இளைஞருக்கும் திருப்பூரை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் முன் மணப்பெண், மறையூர் போலீசாரை செல்போனில் தொடர்பு கொண்டு, தனது விருப்பத்துக்கு மாறாக திருமணம் நடைபெறுகிறது. உடனடியாக திருமணத்தை நிறுத்துமாறு கெஞ்சியுள்ளார். இதையடுத்து, கடைசி நிமிடத்தில் திருமணம் நின்றுபோனதால் மாப்பிள்ளை அதிர்ச்சியடைந்தார்.