புதிய தொழிலாளர் சட்டத்தை திரும்ப பெறவேண்டும், அரசுத்துறைகள் தனியார்மயமாவதை கைவிட வேண்டும், இளைஞர்களுக்கு அரசுத்துறையில் வேலை வழங்கி அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உட்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 தொழிற்சங்கங்கள் இன்று (ஜூலை 9) நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி அமைப்பினர் சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடசென்னையில் பெண் ஒருவர் ஒற்றை ஆளாக மின்சார ரயிலை மறித்தார்.