பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பெனிபட்டி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக பிரபல நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரும் பீகார் பொறுப்பாளருளான வினோத் தாவ்டே, மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோரை சந்தித்தார். இதையடுத்து, அவர் பாஜகவில் இணைய இருப்பதாகவும், சீட் வழங்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வந்தன. இதனிடையே, தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது ஆர்வத்தை மைதிலி தாக்கூர் வெளிப்படுத்தியுள்ளார்.
Courtesy: ANI