உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், காதல் விவகாரத்தில் ரோஹித் (21) என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஜால் என்பவரின் சகோதரியை காதலித்ததால், அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று, உடலை மீட்கக் கோரி குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, திங்கள்கிழமை அன்று அக்ஷய், குணால், அமித் மற்றும் ஜதின் ஆகிய நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி சுஜால் தலைமறைவாக உள்ளார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.