தெலங்கானா: ஜோகுலம்பா மாவட்டத்தில் உள்ள கட்வால் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (25). இவர், திருநங்கை ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த திருநங்கையை திருமணம் செய்து கொள்ளவிருந்த நவீன், அவரது தந்தையின் கல்லறை அருகே பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் கடந்த 6ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நவீன் உடலில் காயங்கள் இருந்ததாகவும், இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.