கிரிக்கெட் பிட்ச்சை ட்ராக்டர் கொண்டு உழுத இளைஞர்

மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், தன் தலைவருக்கு அழைப்பு விடுக்காததால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், டிராக்டருடன் புகுந்து ஆடுகளத்தை உழுதார். இதனால் போட்டி பாதியில் நின்றது. சமூக வலைதளங்களில் இவ்வீடியோ வைரலாகும் நிலையில், விளையாட்டில் அரசியலைக் கலந்த அந்த நபரை உடனடியாகக் கைது செய்து, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

நன்றி: TGS

தொடர்புடைய செய்தி