பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில், ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த 18 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் ‘செல்ஃபி’ எடுக்கவோ அல்லது ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோ பதிவு செய்யவோ முயன்றிருக்கலாம் என்று தெரியவருகிறது. உயிரிழப்புக்கான துல்லியமான காரணத்தை அறிந்துகொள்ளும் வகையில், போலீசார் அனைத்துக் கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி: HateDetectors