விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயன்ற இளைஞர் கைது

இண்டிகோ விமானம் ஒன்று இன்று (ஜூன் 19) சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு 164 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. அப்போது மேற்கு வங்காளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் விமானத்தில் அவசர கால கதவை திறக்கும் பட்டனை அழுத்தி திறக்க முயன்றுள்ளார். இதையடுத்து, அந்த இளைஞரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தவறுதலாக அழுத்தி விட்டதாகவும், தன்னை மன்னித்து விடுமாறும் கைதான இளைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும், அந்த இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி