டெல்லி மெட்ரோவில் அடிக்கடி ஏதேனும் வைரல் சம்பவங்கள் அரங்கேறுவது வழக்கம். ஆனால், தற்போது கொல்கத்தா காலிகாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் இளம் ஜோடி ஒன்று, அங்கிருந்த பயணிகளை சற்றும் பொருட்படுத்தாமல் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டனர். இந்த சம்பவம் எப்போது நடந்தது என தெரியவில்லை. இருப்பினும் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட அந்த ஜோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டீசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நன்றி: latestly.com