ஆபாச அர்ஜுனா பேசியபோது வாய்மூடி சென்றீர்கள் தானே? - திமுக ஐடி விங்

அந்தப்புரத்தில் இரவில் அதிக வேலை இருக்கும் என்று பேசிய ஆபாச அமைச்சரே,  நீங்கள் புகார் கொடுக்கும் போது உங்கள் பேச்சுக்கும் சேர்த்து ஒரு புகார் கொடுத்தீர்களா? என திமுக ஐடி விங் கேள்வியெழுப்பியுள்ளது. இதுகுறித்த எக்ஸ் பதிவில், நேற்றிலிருந்து வாய்கிழிய நியாயம் பேசும் அமைச்சர்கள் எல்லாம் உங்கள் ஆபாச அர்ஜுனா பேசியபோது வாய்மூடிக் கடந்து சென்றீர்கள் தானே? இதுவே எதிர்த்தரப்பில் யாராவது பனையூர் அந்தப்புரத்தைப் பற்றி ஆபாச அர்ஜுனா கேட்ட அதே கேள்வியை எழுப்பியிருந்தால் மெளனமாக செல்வீர்களா? என சாடியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕