இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களை ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் கடைப்பிடித்து வருகிறது. இதனால், வெளிநாடுகளில் மருத்துவக் கல்வியை நாடும் இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவே முதன்மையான தேர்வாக இருக்கிறது. ஜூன் 16 அன்று கோவையில் நடைபெறும் கண்காட்சியில். MBBS, BE, தொழில்நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் ஸ்பாட் அட்மிஷன் நடைபெறவுள்ளது. சேலத்தில் ஜூன் 17, திருச்சியில் ஜூன் 18, மதுரையில் ஜூன் 19, சென்னையில் ஜூன் 21, 22 ஆகிய தேதிகளில் ரஷ்யக் கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது.