தமிழகத்தில் நாளை முதல் ஆன்லைனில் மதுபானங்கள் ஆர்டர் செய்யலாம்

டாஸ்மாக் கடைகளில் நெரிசலைத் தவிர்க்க 'Tasmace2e.in' என்ற புதிய இணையதளம் நாளை (ஆக.6) பயன்பாட்டிற்கு வருகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இயங்கும் இதில், 21 வயது பூர்த்தியானதை உறுதிசெய்து, விரும்பும் கடை மற்றும் பிராண்டை தேர்வுசெய்து பணத்தைச் செலுத்தலாம். இதன் மூலம் உருவாகும் 'QR கோட்'-ஐ காட்டி டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபானங்களை பெறலாம். இருப்பு விவரங்கள் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். மதுவிலக்கு கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி