மத்திய அரசின் 'மேரா ரேஷன் 2.0' செயலி மூலம், ரேஷன் அட்டை இல்லாமலேயே ஆதார் எண்ணை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இச்செயலியில் உள்ள டிஜிட்டல் ரேஷன் கார்டை காண்பித்து, நியாய விலை கடைகளில் பொருட்களை வாங்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அட்டை தொலைந்த நேரங்களிலும் வெளியூர் பயணங்களிலும் பொதுமக்கள் சிரமமின்றி பொருட்களை பெற இது பெரிதும் உதவும்.