பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை UPI மூலமாக சில நிமிடங்களிலேயே நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை EPFO அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக பிரத்யேக மொபைல் செயலி உருவாக்கப்பட்டு வருவதாகவும், வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த சேவை பயன்பாட்டுக்கு வரும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம், குறிப்பிட்ட பணத்தை வைத்துவிட்டு மீதமுள்ள தொகையை எளிதாக எடுக்கலாம்.