முதுகலை மாணவர் சேர்க்கைக்கு 27ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

அரசு கல்லூரிகளில் முதுகலை மாணவர் சேர்க்கைக்கு 27ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 477 இளங்கலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் 85 ஆயிரத்து 237 பேர் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. முதுகலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பதிவு வருகிற 27ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடைபெறும்.

தொடர்புடைய செய்தி