யோகி பாபுவின் 300வது படம் 'அர்ஜுனன் பேர் பத்து' ஜூன் வெளியீடு

நகைச்சுவை நடிகராக வலம் வந்து, குறுகிய காலத்தில் பல படங்களில் நடித்த யோகி பாபு, தனது 300வது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தை தேவ் சினிமாஸ் தயாரித்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் காளி வெங்கட், அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. யோகி பாபு கைவசம் அல்லு அர்ஜுன்-அட்லீயின்‘ராக்கா’, ரவி மோகனின் ‘ஆன் ஆர்டினரி மேன்’ உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.

தொடர்புடைய செய்தி