ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஏமன் நாட்டின் ஹவுதி அமைப்பு முதல்முறையாக இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணையை வீசிப் போரில் இணைந்துள்ளது. இஸ்ரேலின் டிமோனா அணு ஆராய்ச்சி மையத்தைக் குறிவைத்து ஏவப்பட்ட இந்த ஏவுகணையைத் தாங்கள் இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.