நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் கடந்த தினம் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில், விரளி மஞ்சள் ரூ.7,605 முதல் ரூ.14,473 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.4,500 முதல் ரூ.13,023 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரூ.4,905 முதல் ரூ.28,888 வரையிலும் விற்பனை நடந்தது. மொத்தம் 1,200 மூட்டைகள் தொகை ரூ.94.28 லட்சத்திற்கு விற்பனையானதாக கூட்டுறவு விற்பனை சங்க அலுவலர்கள் தெரிவித்தனர்.