இந்திய பெருங்கடல் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஜன.9ஆம் தேதி கன மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
நன்றி: சன்நியூஸ்