ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் நேர மாற்றம்: முக்கிய அறிவிப்பு

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரலுக்கு இயக்கப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16090) ரயிலின் நேரம் நவ.23-ம் தேதி முதல் மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ரயில் அரக்கோணம் நிலையத்திற்கு காலை 7.43 மணிக்கும், திருவள்ளூருக்கு 8.08 மணிக்கும், பெரம்பூருக்கு 8.38 மணிக்கும் வழக்கமான நேரத்தை விட 5 முதல் 10 நிமிடங்கள் முன்னதாகவே வந்து சேரும். இந்த ரயிலின் மற்ற ரயில் நிலைய நேரங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕