திருப்பூரில் அனைத்து ரக நூல்களின் விலையையும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை நூற்பாலைகள் உயர்த்தியுள்ளதால், கடந்த 5 மாதங்களில் மட்டும் நூல் விலை கிலோவுக்கு ரூ.61 முதல் ரூ.66 வரை அதிகரித்துள்ளது. இந்த திடீர் விலையேற்றத்தால் பின்னலாடை தொழில் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நூல் விலை உயர்வை உடனடியாகக் குறைக்க நூற்பாலைகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.