திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்வு

திருப்பூரில் ஆகஸ்ட் மாதத்திற்கான நூல் விலையை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளன. பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டதால் நூல் விலை குறையும் என எதிர்பார்த்த ஆடை உற்பத்தியாளர்களுக்கு இந்த உயர்வு ஏமாற்றமளித்துள்ளது. ஏற்கெனவே பிப்ரவரி முதல் மே வரை கிலோவுக்கு ரூ.61 வரை உயர்ந்திருந்த நிலையில், தற்போதைய கூடுதல் உயர்வு ஜவுளித் தொழிலைப் பெரிதும் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕