யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் தனது XSR155 பைக்கின் விலையை சத்தமின்றி உயர்த்தியுள்ளது. மேலும், புதிய XSR155 பைக் தற்போது மெட்டாலிக் பிளாக் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் நான்கு நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அனைத்து நிற வேரியண்ட்களும் ரூ. 1,49,990 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் மெட்டாலிக் புளூ நிற வேரியண்ட் விலையில் மாற்றமின்றி ரூ.1,49,990 என உள்ளது.